Books by Jamalan Jahir Hussain

நவீன தொன்மங்களும் நாடோடிக் குறி்ப்புகளும்
தனிமனிதன் என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது நவீன சமூகம். இச்சமூகம் உருவாகும் செ... more தனிமனிதன் என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது நவீன சமூகம். இச்சமூகம் உருவாகும் செயல்போக்கில் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணற்ற கதையாடல்களால் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே நவீனதொன்மங்கள். பண்டைய சிந்தனைகளை தொன்மம் என்று அடையாளப்படுத்தியதன் மூலம், அச்சமூகங்களை முற்றிலும் அறிவிற்க புறம்பான உணர்ச்சிமிக்க மனித உடல்களாக குறியிட்ட இந்நாகரீக சமூகம் தன்னை உறுதி செய்துகொண்டு பேரமைப்பாக விரவியிருப்பது அறிவுசார் தொழில் நுட்பம், வளர்ச்சி, அறிவியல், பகுத்தறிவு என்கிற நவீன தொன்மங்களின் கதைவெளிகளில்தான் இக்கதைவெளிகளை சிதைத்துப் பார்க்க முயன்றிருக்கிறது இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். உடலரசியல், பெண்ணியம், கலை இலக்கியம், அரசியல், திரை இலக்கியம் மற்றும் ஈழம் என்கிற பிரிவுகளில் தொகுக்கப்பட்ட இக்கட்டுரைகள் இத்தகைய தொன்மக் கதையாடல்களை பன்முகப் பரப்பில் விசாரணைக்கு உட்படுத்தகின்றன. காந்தி, புள்ளியியல், நீலப்படங்கள், குடி, இஸ்லாமியப் பெண்ணியம், தமிழில் வெளிவந்த புதியவகை நாவல்கள், மண்ட்டோவின் கதைவெளி, பயங்கரவாதம், கிரிக்கெட், மதவாதம், இனவாதம், குடிமகனாதல், தமிழ் ஈழம், ஈரானியத் திரைப்படங்கள் துவங்கி தமிழின் வெகுசனப் படங்கள் வரை இவ்விசாரணையை நிகழ்த்திச் செல்கின்ற இக்கட்டுரைகள் உடல்கள் மனிதர்களாகி, மனிதர்கள் குடிமகன்களாக ஆன கதைகளை வெவ்வேறு பரப்புகளில் வைத்து உரையாடுகின்றன.....
Papers by Jamalan Jahir Hussain
சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் வாழ்நிலைப்பற்றிய கட்டுரை
அறம், ஒழுக்கம். இயற்கை, செயற்கை, கலாச்சாரம் உள்ளிட்ட கருத்தாக்கங்கள் பற்றிய ஆய்வு. இந்திய மற்றும்... more அறம், ஒழுக்கம். இயற்கை, செயற்கை, கலாச்சாரம் உள்ளிட்ட கருத்தாக்கங்கள் பற்றிய ஆய்வு. இந்திய மற்றும் உலக அரசியலில் அறம் என்பது என்ன என்பதை விவாதிக்கிறது. தர்மா எனப்படும் பிராமண தர்மத்தை ஆராய்கிறது. ஊடகங்கள் உருவாக்கிய தன்னிலைகளாக மாறிய சமூகத்தை விவரிக்கிறது.
வளைகுடா நாடுகளில் வந்து கொட்டிக் கிடக்கும் செல்வத்தை அல்லிச் செல்லும் கற்பனையின் யதார்த்தம் என்னவ... more வளைகுடா நாடுகளில் வந்து கொட்டிக் கிடக்கும் செல்வத்தை அல்லிச் செல்லும் கற்பனையின் யதார்த்தம் என்னவாக உள்ளது என்பதை அலசும் கட்டுரை
திருநங்கைகள், திருநம்பிகள் பற்றிய உடலரசியில் ஆய்வு. பாலினமாதலின் அரசியலை ஜீதித் பட்லரின் கோட்பாட்... more திருநங்கைகள், திருநம்பிகள் பற்றிய உடலரசியில் ஆய்வு. பாலினமாதலின் அரசியலை ஜீதித் பட்லரின் கோட்பாட்டைக் கொண்டும், அடையாள அரசிலுக்கு மாற்றாக தெல்யுஸ்-கத்தாரியின் மோலார் அடையாளங்கள் மற்றும் மூலக்கூறு உருவாகுதல் அடிப்படையில் பாலினம் எ்னபது நிழ்த்துதலாகவும் அதனால் உருவாகுதலாக ஆகும் கதையாடலை விவரிக்கிறது இக்கட்டுரை.
சீட்டாட்டம் பற்றிய ஒரு மொழி விளையாட்டு ஆய்வு.
உடல்களின் எண்டரபி... வெப்ப இயக்கவியல் விதிகள்
பிரபஞ்சத்தில் இதுவரையில் செயலில் உள்ள நான்கு விசைகளோடு இயங்கும் ஐந்தாம் விசை பற்றிய ஒரு ஆய்வு.
Book Reviews by Jamalan Jahir Hussain
தலித்துகளுக்கான சந்தை மறுப்பு என்பது தீண்டாமை என்கிற வருண-சாதியத்தின் அடிப்படையில் தடைசெய்யப்பட்ட... more தலித்துகளுக்கான சந்தை மறுப்பு என்பது தீண்டாமை என்கிற வருண-சாதியத்தின் அடிப்படையில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதுதான் தீண்டாமையின் அரசியல் பொருளாதாரம். இந்த நோக்கில் தலித் அரசியல் பொருளாதாரம் ஆழமான ஆய்வுகளைக் கோரி நிற்கிறது. அதற்கான துவக்கப் புள்ளிகளை இந்நூல் வழங்குகிறது. ஆனாலும், இது ஆழமாக ஆராயப்படவேண்டிய ஒரு துறை. தலித் அரசியல் பொருளாதாரம் குறித்து இன்னும் விரிவான பல ஆய்வுகள் தேவை. உலக முதலாளியம் தலித் அரசியலுக்குள் இரண்டு விளைவுகளை ஆழப்பதித்து உள்ளது. 1. அரசின் சீர்திருத்தவாதத்திற்குள மூழ்கியிருத்தல் 2. என்ஜிவோ என்கிற உலகப் பேரரசின் முகவர்களின் அரசியலை முன்வைப்பது. அதாவது இருக்கும் சமூக அமைப்பிற்குள் எந்த மாற்றமும், புரட்சியும் வராமல் பார்த்துக் கொள்வது. அதற்கான அனைத்து முயற்சிகளையும் தலித் அமைப்புகள் முறியடித்து ஒரு புரட்சிகர சமூகமாற்றம் குறித்தும், அதற்கான தலைமை ஏற்பதற்கான அரசியலையும் முன்னெடுக்க வேண்டும்.
Uploads
Books by Jamalan Jahir Hussain
Papers by Jamalan Jahir Hussain
Book Reviews by Jamalan Jahir Hussain